தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை வாயிலாகவும் அறியும்போது நேர்மை என்ற ஒன்றுஇருக்கா என்ற கேள்வி அனைவருக்கும் எழுவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நேர்மைதமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கு என்பதை ஒரு சம்பவம் உரிதாக்கியதோடு, அனைவருக்கும் நெகிழ்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 The 'honesty' is to live... incident in chithamparam

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியை சேர்ந்தவர் மோதிஅலி. இவர் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று சென்றுள்ளார். அவர்கள் கை பையில் ஆரம் செயின் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது கீழே விழுந்துவிட்டது. இதனை கவனிக்காத அவர்கள் பின்னர் வீட்டுக்குச் சென்று பார்த்துபோது நகையை காணவில்லை என அதிர்ச்சியடைந்து அழுது புலம்பினார்கள். பின்னர் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த வழியே தேடி பார்த்துள்ளனர் நகை இருந்த கைப்பை கிடைக்காததால் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு புகார் தர சென்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஷபீர் அகமது என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திலிருந்து அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பைசல் மஹால் திருமண மண்டபம் அருகே சென்றபோது சாலையில் நகைகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து பைக்கை நிறுத்தி நகைகளை எடுத்துள்ளனர். பின்னர் நகைகளை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது நகையை பறிகொடுத்த தம்பதிகள் காவல்நிலையத்தில் புகார் தர இருப்பதை அறிந்தனர்.

Advertisment

இந்நிலையில் சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் காவல்துறையினர் நகைகளை பெற்றுக்கொண்டு இது தொலைத்தவரின் நகைகள்தானா என்பதை விசாரணை நடத்தினர்.

 The 'honesty' is to live... incident in chithamparam

விசாரணையில் அவர்களது நகைகள்தான் என்பது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் ஆகியோர் நகையை தவறவிட்ட தம்பதியிடம் 10 பவுன் நகைகளை ஒப்படைத்தனர். நகைகளை பெற்றுக் கொண்ட தம்பதி கண்ணீர் மல்க நெகழ்சியுடன் நகையை எடுத்து கொடுத்த தம்பதிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமல்லாது அனைத்து பொதுமக்கள் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

எங்கோ ஒரு மூலையில் நேர்மைவாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உரிதாக்கியுள்ளது என்று அனைவரையும் நினைக்க வைத்துள்ளது.