Skip to main content

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து... முதல்வர் உத்தரவு!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

Defamation cases against political leaders canceled ... Chief Minister's order!

 

பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்டது (சில நிபந்தனைகளுடன்) இந்நிலையில் 2012 -2021 பிப்ரவரி வரை தமிழக அரசியல் தலைவர்கள் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட சுமார் 130 வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜயகாந்த், பிரேமலதா, ஈவிகேஸ், விஜயதாரணி, கனிமொழி, ஜி.ராமகிருஷ்ணன், கே.என்.நேரு,  எஸ்.எம்.நாசர், தயாநிதி. ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யவும், மேல் நடவடிக்கைகளை கைவிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்