Skip to main content

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஹெல்ப் டெஸ்க்: திறந்துவைத்த மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர்!!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Dedicated Help Desk for Women and Children: Central Zone Deputy Chief of Police opened

 

இந்திய அரசன் நிர்பயா சட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் உமன் ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டுவருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த 24 மணிநேர சேவை உமன் ஹெல்ப் டெஸ்க் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் 15 காவல் நிலையங்களில் இந்த உதவி மையம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு உதவி மையத்திற்கும் 2 பெண் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண்ணுக்கு (181) வரும் அழைப்புகளுக்கு உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. உமன் ஹெல்ப் டெஸ்க் சேவையை இன்று (26.06.2021) திருச்சி மாவட்டத்தில் தொடங்கிவைத்து பேசிய மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் ராதிகா இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்களோடு உரையாடுகையில், “உதவி என்று கேட்டு உங்களுக்கு வரக்கூடிய ஒவ்வொரு அழைப்பையும் உங்களுடைய பிரச்சனையாக கருதினால் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான 100 வகையான வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.

 

Dedicated Help Desk for Women and Children: Central Zone Deputy Chief of Police opened

 

எனவே ஒவ்வொரு காவலர்களும் பிரச்சனைகளோடு வரக்கூடிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக அவர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சனையை முழுமையாக புரிந்துகொண்டு அவற்றிற்கு முழுமையான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இயக்கத்தின் நோக்கம்” என்று கூறினார். 24 மணி நேரமும் இந்த உமன் ஹெல்ப் டெஸ்க் சேவையானது செயல்படும் என்பதால் இந்த உதவி மையத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு லேப்டாப் மற்றும் இருசக்கர வாகனங்களை அரசு வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற துவக்க விழாவில் மத்திய மண்டல துணைத் தலைவர் ராதிகா பெண் காவலர்களுக்கான லேப்டாப் மற்றும் இருசக்கர வாகன அணிவகுப்பைத் துவங்கிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்