Skip to main content

“ஊட்டி ஆளுநர் மாளிகையில் எதன் அடிப்படையில் திருமணம் நடந்தது” - தயாநிதி மாறன் கேள்வி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Dayanidhi Maran Questioned On what grounds was the marriage held at Ooty Governor’s House?

 

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த வார்டுகளில் உள்ள 104 தெருக்களிலும் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.52.69 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த மேம்பாட்டு பணிகளை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், “நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவறாக பேசிக்கொண்டு வருகிறார்.  இது அவரது விரக்தியை காட்டுகிறது. அவர் என்ன சாதனை செய்தார்? அவரது மகனும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரும் அந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.

 

மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கும் ஒரே தைரியம் கொண்ட தலைவராகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெரும். நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் யாரைப் பிரதமராக காட்டுகிறாரோ அவர் கண்டிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்.

 

தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எல்லாம் ஒரு தலைவரா? மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக ஆளுநர் அவரது அதிகாரங்களின் எல்லையை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநரை கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆளுநரின் வேலை ஒரு தபால்காரர் வேலைதான். ஆனால், அவர் தேவையில்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

ஆளுநர் பொறுப்பு என்பது அரசு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு பொறுப்பு ஆகும். அது மாதிரியான பொறுப்பை வாங்கிக் கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்க்கும் கட்சிகளை இதுபோன்று சிரமத்துக்குள்ளாக்கி வருகிறார். இதன் மூலம், அடுத்தபடியாக மத்திய அரசு துணை ஜனாதிபதி அல்லது வேறு ஏதேனும் உயர் பொறுப்புகளை வழங்கும் என்ற ஆசையில் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளை ஆளுநர் ஆர்.என். ரவி செய்து வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கக் கூடிய ஆளுநர் மாளிகையில்  அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா” என்று கேள்வி எழுப்பினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Next Story

“நிர்மலா சீதாராமன் பேச்சில் வன்மம் இருக்கிறது” - தயாநிதி மாறன் எம்.பி.

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Nirmala Sitharaman's speech Dayanidhi Maran MP

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில் இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் பேசுகையில், “இடைக்கால பட்ஜெட் அறிக்கை வெறும் கண்துடைப்புதான். இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நாமம் தான். ஏழை மக்களுக்கு நிதிநிலை அறிக்கை மூலம் எந்த பயனும் இல்லை. வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார்கள், கையசைத்தார்கள், சென்றார்கள். மக்களின் வரிப்பணத்தை வரிப்பணத்தை கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒரு மணி நேரம் தமிழ்நாடு அரசை வசைபாடினார். நிர்மலா சீதாராமன் பேச்சில் வன்மம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் லாபத்துக்காக 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீதுதான் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு ரூ. 37 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை. இதுவரைக்கும் எங்களுக்கு வந்தது பூஜ்ஜியம்தான். எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் அரசியல் லாபத்திற்காக 95 சதவித வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது தான் போடப்பட்டுள்ளன. எமர்ஜென்சியை போல் அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குகிறது. பிற்படுத்தப்பட்டோர் மருத்துவர் ஆகக்கூடாது என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் நீட் தேர்வு. அய்யா பிரதமர் மோடி அவர்களே, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்றீர்களே என்னாச்சு. கடந்த 10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்” எனப் பேசினார்.