Skip to main content

இன்னும் இருக்குது தண்டோரா!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராம மக்களுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்க வேண்டுமானால் அதை தண்டோரா மூலம் மட்டுமே கொண்டு சேர்க்க முடியும். குறிப்பாக புயல், மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள முன் எச்சரிக்கையாக தண்டோரா போட்டு எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

Dandora is still there

ஆனால் அறிவியல் வளர்ச்சியாலும் அடுத்தடுத்து வந்துள்ள தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாலும் இந்த தண்டோரா முறை ஒழிந்துவிட்டது. அதற்கு பதிலாக சுவரொட்டிகள் ஒட்டுவது, ஒலிபெருக்கி மூலம் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. தற்போது மேலும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
 

இப்படி தண்டோரா முறை முற்றிலும் ஒழிந்துவிட்ட நிலையில் தற்போது வரை ஒரு சில கிராமங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதிக்கு உட்பட்ட கோத்திராப்பட்டி என்னும் கிராமத்தில் சுப்பையா என்பவர் சாலையிலும் வீதியிலும் தண்டோரா போட்டுக் கொண்டிருந்தார். தண்டோராவில் அவர் சொன்ன தகவல் இது தான் "வீட்டுவரி, தண்ணி வரி இங்கிலீசு 5 தேதிக்குள்ள கட்டோனும்.. என்பது தான்.
 

இன்னும் தண்டோரா போட்டு தான் தகவல் சொல்றாங்களா? என்ற நமது கேள்விக்கு.. எல்லா ஊர்லயும் விளம்பரம் செய்வாங்க ஆனா கோத்திராப்பட்டியில தண்டோராதான். ஊரெங்கும் சொல்லிட்டு வர ரூ. 300 சம்பளம் கிடைக்கும். அதனால வருசத்துக்கு ஒரு முறை வரிக்கட்டச் சொல்லி தண்டோரா போடுவேன்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்