Published on 31/05/2020 | Edited on 31/05/2020

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஜா.ஏந்தல் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (29/05/2020) இரவு இவரது வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து, 25 பவுன் நகை மற்றும் ரூபாய் 30,000 பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து சிறுபாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள கள்ள வீரன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்ததுடன், அருகிலிருந்த விவசாய மின் மோட்டாரின் ஒயரை திருடி சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.