Skip to main content

நெல்லை, புதுக்கோட்டையில் மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம்...  நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பு!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Corona vaccination camp again in Nellai, Pudukottai ... Public waiting in long queue!

 

தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் மூன்று தினங்களுக்குப் பின்பு நேற்று  (11.06.2021) மீண்டும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

 

Corona vaccination camp again in Nellai, Pudukottai ... Public waiting in long queue!

 

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. நெல்லை மாவட்டம், பாளை அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியது. இன்று நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் 8,800 தடுப்பூசிகள் வந்துள்ளது. 7,800 கோவிஷீல்டு, 1,000 கோவாக்சின் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை 82 தடுப்பூசி மையங்கள் உள்ளன. கடந்த 10 நாட்களாக தடுப்பூசிகள் போடப்படாத நிலையில் இன்று அந்தப் பணிகள் துவங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 1,53,500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசிகள் வந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர். நாளொன்றுக்கு 5,000 பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.