Skip to main content

'நோயை அணைக்கட்டி தடுக்க முடியாது' - திருநாவுக்கரசர் எம்.பி.

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

congress MP su thirunavukkarasar about corona virus issue

 

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த வைரஸை எதிர்கொள்வது சற்று சவாலாக உள்ளது.  இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொது முடக்கத்தை மீண்டும் நீட்டிப்பதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.


இந்நிலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், கரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என பேசுவதை தவிர்த்து அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசால் நோயை அணைக்கட்டி தடுக்க முடியாது; அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல என்று கூறிய அவர், மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்