Skip to main content

’சர்கார்’ரிலீஸ் தியேட்டரில் மோதல் - விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
sr

 

விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது.  இதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள விக்னேஷ்வரா திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக திரண்டனர்.  ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.  அசம்பாவீதம் ஏற்பட்டுவிடும் சூழல் நிலவியதால் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

 

ssssrrr

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” - வைரமுத்து உருக்கம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vairamuthu about udhayam theatre yet to be closed

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருக்கிறது. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது. மேலும் கொரோனோவிற்கு பிறகு திரையரங்கிற்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்கை மூடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

ad

சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.  இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரை வளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன. மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.