Skip to main content

''நீதித்துறை மீதான நம்பிக்கை வீண்போகவில்லை''-மருத்துவர் சுப்பையா மனைவி பேட்டி!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

highcourt chennai

 

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசுத் தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிர்த்தரப்பு சார்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.  

 

இந்த வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், சுப்பையாவின் மனைவி சாந்தி கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவரும் “நானும், என்னுடைய கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அது வீண்போகவில்லை. தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பினால் என் கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு, இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். என் கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களில், மணமாகாத எங்களது மகள்களை நினைத்து கலங்கினார். அவர் கலங்கியதற்கு ஆறுதலான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.


 

சார்ந்த செய்திகள்