Skip to main content

மருத்துவ மாணவிகளிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக வீடியோவுடன் புகார்-விசாரணைக்குழு விரைவில் அறிக்கை

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுபாட்டுப்பாட்டிலுள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின் மருத்துவக்கல்லூரியில் 45 முதுகலை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

hospital

 

அரசு மருத்துவர்கள் கார்த்திகேயன் மற்றும் ரோஷன் ஆகியோர் அங்கு பயின்று வரும் சில மருத்துவமாணவிகளை வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டு வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து மொத்தமுள்ள 45 மாணவர்களும் கையெழுத்திட்டு தன்னிடம் தகாத முறையில் ஈடுப்பட்ட போது  மருத்துவர் கார்த்திக்கேயன் எடுத்த வீடியோ பதிவை ஆதாரமாகவும் வைத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயா என்பவரிடம் புகாரளித்துள்ளனர்.

 

hospital

 

இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என விஜயா கூறியதாகவும். இதுபோன்ற விஷயங்கள் இங்கு சகஜம் எனவே இதை பெரிதுபடுத்தவேண்டாம் எனவும் மாணவிகளை எச்சரித்தாகவும் கூறப்படுகிறது.

  hospital

 

இதனை அடுத்து மீண்டும் கார்த்திகேயன் மற்றும் ரோஷன் ஆகியோர்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோன மாணவிகள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த வீடியோ ஆதாரத்துடனான புகார் மனுவை அனுப்பிவைத்துள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து இந்த புகாரின் பேரில் விசாரிக்க ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் டீன் ஜெயந்தி ஐந்துபேர் கொண்ட விசாரணை குழுவை திங்கள் கிழமை நியமித்தார். அந்த ஐந்துபேர் கொண்ட விசாரணை குழு செவ்வாய் கிழமை கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்தவமனையில் மருத்துவர் கார்த்திகேயன், ரோஷன், புகாரை பெரிதாக்கக்கூடாது எனக்கூறிய கண்காணிப்பாளர் விஜயா ஆகியோரிடம் நான்கு மணி நேரத்திற்கு மேலாக விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கூடிய விரைவில் அந்த அறிக்கை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார்.

 

அண்மையில் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும்படி பேசிய விவகாரம் அடங்குவதற்குள் இப்படி  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது எழுந்த இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.       

சார்ந்த செய்திகள்