Skip to main content

"முழு வீச்சில் தேர்தல் ஏற்பாடுகள்" - சத்யபிரதா சாஹு பேட்டி!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021' என்ற கையேட்டை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார். 

 

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைப் பாதுகாப்பாக நடத்த உறுதி பூண்டுள்ளோம். தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினரும் பணியாற்றுகின்றனர். தேர்தலில் எந்த முறைகேடும் நடக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்