Skip to main content

‘நம்ம சென்னை’ பக்கத்துல ‘வணக்கம் தம்பி’ கவனம் ஈர்க்கும் மெரினா (படங்கள்) 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 


சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான டீசரை நேற்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அந்த டீசரில் சென்னை மெரினா நேப்பியர் பாலம் செஸ் போர்டு வண்ணமான கருப்பு, வெள்ளையில் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ அடையாளத்திற்கு அருகே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவான ‘வணக்கம் தம்பி’ லோகா வைக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நினைவுச் சின்னம் அருகே சாலையில் செஸ் போர்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்