Skip to main content

ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக ரயில்பெட்டிகளை மாற்றுவதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்துதல் மற்றும் வார்டுகளாக மாற்றுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதில், 5000 ரயில் பெட்டிகளை, தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரயில்வே துறை அறிவிப்பில் 5000 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றும் இலக்கில், 2500 பெட்டிகளை அவ்வாறு குறுகிய கால அவகாசத்தில் மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

chennai high court corona wart railway government


இந்நிலையில், ரயில்கள் மற்றும் பணிமனைகள் ஏற்கனவே போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், கரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக அவற்றை மாற்றக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், போதிய உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் இல்லாத இடங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்த போது, வழக்கு குறித்து ஏப்ரல் 9- ஆம் தேதி தமிழக அரசு மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

ரவுடிகள் பட்டாக்கத்தியுடன் நடனமாடி ரகளை; சிக்கிய சிசிடிவி காட்சிகள்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
cannabis intoxicated raiders rampage near Chennai

சென்னை மணலி சாத்தாங்காடு பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பட்டாகத்தியுடன் சாலையில் நடனமாடி ரகளையில் ஈடுபட்டனர். அத்தோடு, ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை தூக்கிச் சென்று தங்களுடன் நடனம் ஆடுமாறு மிரட்டியதால் அந்தச் சிறுவன்  கும்பலிடம் இருந்து தப்பி தலைத் தெறிக்க வீட்டிற்கு ஓடி உள்ளான்.

மேலும் போதைத் தலைக்கேறிய நிலையில் ரவுடி கும்பல் அவ்வழியாக வந்த இரு சக்கர ஊர்திகளில் செல்படுபவர்களை வழிமறித்து அவர்களை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரவுடிகள் நடத்திய அராஜகத்தால் அப்பகுதியே பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து மணலி சாத்தாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த நிலையில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதின் மூலம் சமூக விரோதிகளின் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், அரசும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் கஞ்சா சாகுபடி செய்யவும் சமூக விரோதிகள் தயங்க மாட்டார்கள் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.