Skip to main content

"நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்துவேன்"- தலைமை நீதிபதி கருத்து!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

chennai high court chief justice


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (14/07/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, "உயர்நீதிமன்றத்தில் 19 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

 

அப்போது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ”ஒரு ஞாயிற்றுக்கிழமை உயர்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்த உள்ளேன். நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதையும் கவனித்தேன். தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து உயர்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்துவோம்” என்றார். வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் தன்னுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்