Skip to main content

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; திருச்செந்தூரில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

 Chance of rain in 20 districts; Maximum rainfall recorded in Tiruchendur

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான அளவில் மழை பொழிந்து வருகிறது. மயிலாடுதுறையில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, புதுச்சேரியில் நகரப் பகுதிகள் என பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 4 சென்டி மீட்டர் மழையும், சேலம் ஏற்காட்டில் 2  சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக பாஜக தலைவரின் லண்டன் மர்மம் ! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu BJP President to go to London

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது. 

அதேசமயம்,  தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை  வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக தலைவர் சென்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த 500 ஸ்வீட்ஸ்  பாக்ஸ்களை லண்டனில் பயன்படுத்தவும் இந்த படிப்பு பயணத்தில் திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் பரவியுள்ளது.

Next Story

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் கணிப்பு! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Chance of very heavy rain Meteorological Center forecast

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று (26.06.2024) ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்படுகிறது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (27.06.2024) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.