Published on 04/07/2021 | Edited on 04/07/2021

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் முகையூர் மணம்பூண்டியில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருக்கோவிலூர், சின்னக்கல்லாறு, வால்பாறையில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.