Skip to main content

கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி!!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

 

keeladi

 

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் 2015 ஆம் ஆண்டு முதல் நான்கு கட்டமாக அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் கிடைத்தன. தொடர்ந்து அகழாய்வு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில்,

 

2018-2019 ஆம் ஆண்டில் 5 ஆம் கட்ட அகழ்வாய்வு நடத்த தமிழக அரசிற்கு மத்தியஅரசு அளித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா  கீழடியில் 5 ஆம் கட்ட அகழ்வாய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்