கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள 33 வார்டுகளிலும், இறந்தவர்களை எரிப்பதற்காக சாவடிக்குப்பம் பகுதியில் நவீன மயமாக்கப்பட்ட மின்மயானம் அமைந்துள்ளது. இந்நிலையில் விருத்தாச்சலம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வி என்பவர் இறந்ததினால், அவரது உடலை மின்மயானத்தில் எரியூட்டினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிலையில் அவரது உறவினர்கள், அஸ்தியை வாங்குவதற்காக மின்மயானத்திற்கு சென்ற போது, அங்கு செல்வியின் உடல் முழுவதுமாக எரியாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வியின் உறவினர்கள் மின் மயானத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.