Skip to main content

இணையதள வசதிகள் இருந்தால் போதும் வழக்குகளின் முழு விவரங்களை அறியலாம்!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை ஒருங்கிணைத்துள்ளது மத்திய சட்டத்துறை அமைச்சகம். இதன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றமும் ஒருங்கிணைக்கப்பட்டு இதற்காக ஒரு புதிய இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மத்திய சட்ட அமைச்சகம் வெளியீட்டுள்ளது. இந்த இணையதள முகவரி: ecourts.gov.in மற்றும்  e-Courts Services மொபைல்  செயலியை (Mobile Application)  24×7 பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் , தாலுகாவில் உள்ள நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் (e - District Courts , High Courts, Taluk Courts) இணைக்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

online status court

இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வழக்குகளின் விவரங்கள் மற்றும் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வருகிறது தொடர்பான விவரங்கள் பெற முடியும். மேலும் வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டால் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி மக்கள் எளிதாக தீர்ப்பின் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பாமர மக்களுக்கு இந்த இணையதள வசதியின் மூலம் நேரம் சேமிக்க முடியும் மற்றும் அலைச்சல் குறையும். எந்த நேரமும் இந்த இணையதளத்திற்கு சென்று வழக்குகளின் விவரங்களை அறிய முடியும் என்பது இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பம்சங்கள் ஆகும். FIR NUMBER மற்றும் District Name , Date of case filling , வழக்கறிஞரின் பெயர்கள் , CNR NUMBER , Registration Number போன்றவை குறிப்பிட்டால் வழக்கு தொடர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் கேவியட் மனு செய்தவர்களின் விவரங்களை எளிதில் அறியலாம். மக்களிடம் "Android Mobile" மற்றும் "Internet" இருந்தால் நிமிடத்தில் வழக்குகளின் தகவல்களை அறியலாம். மேலும் இந்த மொபைல் செயலியில் "GPS" option -ம் உள்ளது. "Google Maps" உதவியுடன் நீதிமன்றம் எந்த பகுதியில் உள்ள என்பது தொடர்பான முழு விவரங்கள் "e-Courts Services" செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீதிமன்றம் தொடர்பான அனைத்து விளக்கங்கள் மற்றும் ஆவணங்களை எளிதாக பெறலாம். அனைத்து வழக்குக்களும் நீதித்துறை இணையதள சேவையில் பதிந்துள்ளது என்பது  ஜனநாயகத்தையும்  , இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயிர் ஊட்டுவதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் மிக விரைவாக தீர்ப்புகள் வழங்குவதற்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும். இதன் மூலம் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இந்திய இளைஞர்கள் இந்த செயலியின் உள்ள விளக்கத்தை கிராமம் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.


பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.