Skip to main content

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு: பொதுத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

 

RAJENDRABALAJI



மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 
 

அதில், தமிழக அமைச்சராக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய வருமானம் வரி வரம்பிற்குள் இல்லை எனவும், ரூ.18.88 லட்சத்திற்கு அசையும் சொத்தும், ரூ.19.11 லட்சத்திற்கு அசையா சொத்தும் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
 

அமைச்சரான பின்னர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
 

இந்த மனு மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
 

விசாரணை முடிவில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஆஜராக கோர்ட்டில் உத்தரவிடப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

சார்ந்த செய்திகள்