
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின், சதீஷ்குமார், சைலேஷ்குமார், சரூஷ். இவர்கள் 4 பேரும் பெங்களூருவில் இருந்து தங்கள் சொந்த ஊரான புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அதன்படி இவர்கள் திருவண்ணாமலை அடுத்த சோ.காட்டுக்குளம் பகுதியில் விடியற்காலை 03:50 மணிக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து மீது இவர்கள் பயணித்த கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் காருல் இருந்த 4 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். அதனைத் தொடர்ந்து இவர்கள் 4 பேரின் உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை நேற்று இரவு பௌர்ணமி என்பதால் அதிகமான வாகனங்கள் திருவண்ணாமலை இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தன. அதே போன்று வெளியூர்களில் இருந்தும் வாகனங்கள் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. எனவே மின்னல் வேகத்தில் இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.