Skip to main content

பசுமை போர்த்திய கிராமத்திற்கு வந்த பேரிடி; கெஞ்சும் 'கவுஞ்சி'

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

பசுமை போர்த்திய கொடைக்கானலின் கவுஞ்சி கிராமத்தில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

கொடைக்கானல் பகுதியில் உள்ள அழகான மலை கிராமம் தான் கவுஞ்சி. இந்த பகுதியின் மக்களின் பிரதான தொழிலே விவசாயமும், கால்நடைகளை மேய்ப்பதும்தான். இந்த நிலையில் அண்மையில் அங்கு மீன்பண்ணை அமைப்பதாக அரசு திட்டமிட்டது. ஆனால் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்த அந்தப்பகுதி மக்கள் நீதிமன்றம் வரை சென்று அதை முறியடித்தனர். தற்போது சுற்றுலாத்துறை சார்பில் அங்கு ஒரு சாகச சுற்றுலாத்தலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பு கவுஞ்சி பகுதி மக்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஏற்கனவே சுற்றுலா வருகிறோம் என்று சொல்லி வரும் பலர் கால்நடை மேய்க்கும் இடங்களில் மது பாட்டில்களையும் பிளாஸ்டிக் குப்பைகளையும் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் எங்களுடைய நிலம் பாதிக்கப்படுவதோடு தாங்கள் மேய்க்கும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதன் தொடர்ச்சியாக தங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள். இந்த நிலையில் சாகச சுற்றுலாத்தலம் அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். நாங்கள் எங்கள் நிலத்திலேயே கால்நடைகளை மேய்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சாகச சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு சென்ற அப்பகுதி மக்கள் திடீரென அமர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களுடைய கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.