Published on 24/01/2023 | Edited on 24/01/2023

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் கேட்டதாக நல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆதாரத்துடன் நேரில் சென்று விசாரணை செய்து பட்டா மாறுதலுக்காக 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் முனியப்பனை கைது செய்துள்ளனர்.
இதேபோல் அண்மையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரூபநாராயணநல்லூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.