Skip to main content

பவானி ஆற்று வெள்ளம் கட்டுக்குள் வருகிறது 

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
b

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பவானிசாகர் அணை. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை மாயாறு மற்றும் பில்லூர் அணையிலிருந்து பவானிசாகர் அணைக்கு வருகிறது. ஏற்கனவே பவானிசாகர் அணை நிரம்பியதால் இங்கு வந்த உபரி நீர் 70 ஆயிரம் கண அடியும் அப்படியே அணையிலிருது திறந்து விடப்பட்டது. இதனால் தொட்டம் பாளையம், சத்தியமங்கலம், அரசூர், கொடிவேரி, அத்தானி மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடியிறுப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் மேலும் இந்த உபரி நீர் அப்படியே பவானி கூடுதுறையில் உள்ள காவிரி ஆற்றுடன் கலந்து சென்றது. 

 

இந்த நீர்வரத்து  நேற்று 50 ஆயிரம் கண அடி யாக குறைந்தது. இந்நிலையில்  மாயாறு மற்றும் பில்லூர் அணையிலிருந்து பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்து 29 ஆயிரம் கண அடியாக குறைந்தது இதனால் பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு 25 ஆயிரம் கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது இதனால் பவானி ஆற்றில் மெல்ல மெல்ல வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வருகிறது. காவிரியுடன் கலக்கும் பவானி ஆறு 50 ஆயிரம் கண அடியிலிருந்து 25 ஆயிரமாக குறைந்து விட்டது. ஆனால் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி ஆறு 1.70 லட்சத்திலிருந்து தற்போது 2 லட்சம் கணஅடியாக அதிகரித்திருப்பதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்