நீட் பயிற்சி என்ற பெயரில் நடைபெறும் கட்டண வசூல் குறித்து பள்ளிக்கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் கனிமொழி கூறியதாவது,
பல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ப்ளஸ் ஒன் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடம் நீட் பயிற்சி என்ற பெயரில் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கட்டணம் வசூலித்து வருகின்றன.
மறுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ப்ளஸ் ஒன் சீட் மறுக்கப்படுகிறது. இந்த பகல் கொள்ளையை பள்ளிக் கல்வித் துறை தடுப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.