கடந்த 2013- ஆம் ஆண்டு தடகள பயிற்சியாளர் நாகராஜனிடம் தடகள பயிற்சிக்காக சென்றப் பெண்ணுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், பயிற்சியாளர் நாகராஜன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி வீட்டில் பயிற்சியாளர் நாகராஜனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர், நாகராஜனை ஜூன் 11- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நாகராஜனை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
பாலியல் தொல்லை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகராஜன் மீது காவல்நிலையத்தில் 5 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.