Skip to main content

'தேங்காய் உருட்டல் முறை'யில்  நீரோட்டம் கண்டறியும் விருத்தாசலம் பகுதி விவசாயிகள்!

Published on 03/07/2020 | Edited on 04/07/2020
Area Cultivators for 'Coconut Rolling System'

 

“கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக…” என்பது முன்னோர் பழமொழி. தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் பெரும்பாலும் கிணறு வெட்டி விவசாயம் செய்யும் பழக்கத்தை விட்டு விட்டு, போர்வேல் இயந்திரத்தை கொண்டு லட்சக்கணக்கில் செலவு செய்து, பூமியை துளையிட்டு விடிவதற்குள் ஆழ்துளைக் கிணற்றினை உருவாக்குகின்றனர். ஆனால் அவ்வாறு தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறதா, இல்லையா என்பது கேள்விகுறியாகத்தான் உள்ளது. 300 அடி 500 ஆழம் போர்வெல் போட்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் பாடு அதோகதிதான்.

பழங்காலங்களில விவசாயிகள் நிலத்தடி நீர் மட்டத்தை கண்டறிய கரையான் புற்று, அத்திமரம், நாவல் மரம், மருத மரம், வேம்பு மரம் உள்ளிட்ட மரங்கள் வளரும் இடங்கள், பசுமாடு அசை போடுவதற்காக அமரும் இடங்களில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்தனர்.

அதன் வழியில் ஒன்றான தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஜெயகுரு என்பவரின் நிலத்தில் தேங்காய் உருட்டல் முறையில், பூமிக்கு அடியில் உள்ள நீரோட்டத்தை கண்டறிந்தனர். குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து  “எல்” வடிவில்  கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால்,  தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.

 

Area Cultivators for 'Coconut Rolling System'


இவ்வாறு 90 டிகிரியில் தேங்காயின் குருமி இருந்த இடங்களை அளவிட்டு கொள்கின்றனர். மேலும் வயல் முழுவதும் நடந்து மேற்கொண்டு நீரோட்டம் செல்லும் வழியை கண்டுபிடித்து அவற்றிற்கு மையமாக உள்ள இடத்தில், தாம்பூலத்தின் மேல் தேங்காயை வைத்து, அதற்குமேல் ஒருவரை அமர வைக்கின்றனர். அப்போது குறிப்பிட்ட நேரத்தில் தேங்காய் தானாகவே சுற்றுவதாக கூறுகின்றனர். பின்னர் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரின் தொலைவை, ஒவ்வொரு சுற்றுக்கும் கணக்கிட்டு தொலைவை கண்டறிந்து கூறுகின்றனர்.

பழங்கால முறைகளில் ஒன்றான தேங்காய் உருட்டல் முறையில் 100% வெற்றி அடைந்து சிறப்பான முறையில், வற்றாத நிலத்தடி நீர்மட்டத்தை  கண்டறிந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விஞ்ஞானம் ஏதுமில்லாத காலத்தில் நமது முன்னோர் மெய்ஞானத்தின் துணையோடு பல அற்புதங்களை நிகழ்த்தினர். அதுபோன்ற பழங்கால முறையில் நீரோட்டம் கண்டுபிடிப்பது ஆச்சர்யத்தை தருகிறது.

 

சார்ந்த செய்திகள்