Skip to main content

திமுகவில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

hjk

 

திமுகவில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திமுகவில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிரப்ப பட்டன. திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் நியமிக்கப்பட்டனர். நாளை திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட இருக்கிறது. இந்நிலையில் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா மற்றும் பொன்முடியை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்குமாறு கட்சி விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க தலைமை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்