Skip to main content

‘6 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் ஓடாது’ - ஊர் திரும்பும் மக்கள் அதிர்ச்சி

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Announcement that omni buses will not run after 6 o'clock today

 

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விடுமுறையின் தொடக்கத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில், தற்போது இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க கோரியும், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், பயணிகளை பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி இந்த அறிவிப்பை தென் மாநில பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

 

விடுமுறை முடிந்து ஊர் திரும்ப உள்ள பயணிகள் இன்று ஆயத்தமாகி வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வைத்துள்ளதாகவும், இந்த அறிவிப்பால் தற்போது அவர்கள் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்