Skip to main content

அம்மா உணவகத்திற்கு 25 ஆயிரம் நிதி அளித்த அமமுக மாநகர செயலாளர்!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

கரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க, மக்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையை நிறுத்தி, உயிர் வாழ்வாதற்காக போராடி வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தின் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ‘பசி’யை ஆற்றுவதற்கு அதுவும் குறிப்பாக ஏழை, ஆதரவற்றோர், சாலைகளில் வசிப்போர், கடைநிலை தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்கள் உணவின்றி அல்லல்படும் சூழல் உருவானது.

 

 Ammk city secretary who financed 25 thousand for amma restaurant!


இந்த சூழலில்தான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். காய்கறி உட்பட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர், அதுவும் நேரக்கட்டுப்பாட்டுடன். இவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது அம்மா உணவகம்தான்.

கட்சி பேதம் இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கரோனா நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உள்ளதாலும், கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு உள்ளதாலும் அம்மா உணவகத்தில் ஏழை மக்கள் உணவு அருந்தி வருகின்றனர். ஏழைகளுக்கு உதவும் பொருட்டு 3 வேளையும் சாப்பாடு 1 - ந்தேதி முதல் வருகிற 14 ந் தேதி வரை திருச்சி மரக்கடை அம்மா உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக வழங்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியத்திடம் முதல் கட்டமாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது   சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் பஷிர் உடன் இருந்தார்.

 

 Ammk city secretary who financed 25 thousand for amma restaurant!


பலதரப்பட்ட கட்சியினர் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய நிலையில் அம்மா உணவகத்திற்கு தினகரன் கட்சியைச் சேர்ந்த மாநகர செயலாளர் அம்மா உணவகத்திற்கு நிதி கொடுத்தது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

''நிரூபித்துவிட்டால் நாளையே பாஜகவில் இருந்து போய் விடுகிறேன்'' - தமிழிசைக்குத் திருச்சி சூர்யா சவால்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'I will leave BJP if I prove Tamilness' - Trichy Surya interview

'பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன்' எனப் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா பேசுகையில், ''இருக்கும் மாண்பை முன்னாள் மாநில தலைவர் (தமிழிசை) காப்பாற்ற வேண்டும். பொது இடத்திற்கு போகும் போது தவறான விஷயங்களைப் பேச வேண்டாமே. சில விஷயங்களைச் சொல்வதற்கும் இடம் இருக்கிறது. இன்றைக்கு தனிப்பட்ட முறையில் தமிழிசை அக்கா எனக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழிசை அக்காவுக்கும் பயங்கர போர் நடக்கும். அந்தச் சூழ்நிலையிலும் நான் திமுகவில் இருக்கும் பொழுது கூட என்னுடைய மகன் பிறந்தநாளுக்கு வந்துட்டு போனார்கள். அவர்கள் என் மீது மிகவும் பிரியம் கொண்டவர். ஆனால் கட்சி ரீதியாக பார்க்கும் போது அவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும், அவரை தலைவராக ஏற்று நான் பாஜகவிற்கு வரவில்லை.

யார் தலைவரோ அவருடன் உடன்பாடு, பிரியம், கட்டுப்பாடு இருக்க வேண்டும். திமுகவினர் சிலர் ஆட்டுக்கு பாஜக தலைவரின் புகைப்படத்தை மாட்டிவிட்டு அதை நடு ரோட்டில் வெட்டுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு தமிழிசை எங்காவது அதற்கு கண்டனம் தெரிவித்தார்களா? அவங்களை பரட்டை எனச் சொன்னது கோபம் வருகிறது. ஆனால் மாநில தலைவரின் புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் மாட்டி அதே திமுக காரர்கள் நடுரோட்டில் வெட்டுவதற்கு தமிழிசை கண்டனம் தெரிவிச்சாரா? அதை எல்லாம் பேசாதவர்கள் இதை ஏன் பேச வேண்டும். உங்களுக்கு கருத்து இருந்தால் முன்னாள் மாநில தலைவர் என்ற கட்டுப்பாடுடன் கட்சித் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும். பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன். ஒரு குற்றப்பின்னணியில் வருவோரை கட்சியில் சேர்த்தார்கள் என்று கணக்கு காட்ட வேண்டும். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அது நடந்தது முன்னாள் மாநில தலைவர்கள் இருந்த சூழ்நிலையில்தான்'' என்றார்.

Next Story

பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு பூகொடுத்து வரவேற்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Teachers welcomed the students with flowers

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட இருக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்; மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும்; பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். திருச்சி, கடலூர், கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து வரும் மாணவர்களை வரவேற்பதோடு, புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மலர், இனிப்பு, புத்தகப்பை, எழுதுபொருள்  கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு 'குழந்தைகளை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் பூக்கள் கொடுத்து மாணவர்களைஆசிரியர்கள் வரவேற்றனர்.