Skip to main content

நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கையால் தீக்குளிக்க முயன்ற அதிமுக பிரமுகர்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

அறக்கட்டளை வைத்திருந்த ஷெட்டை அகற்றியதைக் கண்டித்து அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் சூர்யா அறக்கட்டளை என்ற பெயரில் அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.ஏ. மூர்த்தி என்பவர் ஏரிக்கரையையொட்டி ஷெட் ஒன்றை அமைத்திருந்தார். அதில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க சவப்பெட்டி (குளிர்பதனபெட்டி) வைத்திருந்தார். அதனை நெடுஞ்சாலை துறையினர் இன்று (01.10.2021) அகற்றிவிட்டனர். 

 

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர், ஜேசிபி இயந்திரத்தின் முன்பு படுத்துக்கொண்டு தன்னை ஏற்றிக் கொலைசெய்துவிட்டு ஷெட்டை அகற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அதிமுக பிரமுகர் மூர்த்தி, திடீரென பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், போலீசார் மூர்த்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்தவர்களை வேளச்சேரியில் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்