Skip to main content

வெளியானது அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK final candidate list released

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். அறிவிப்பின்படி, நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை - சிங்கை ராமச்சந்திரன், திருச்சி - கருப்பையா, மயிலாடுதுறை - பாபு, சிவகங்கை - சேவியர் தாஸ், தூத்துக்குடி - சிவசாமி வேலுசாமி, ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார், வேலூர் - பசுபதி, தர்மபுரி - அசோகன், திருவண்ணாமலை - கலியபெருமாள், கள்ளக்குறிச்சி - குமரகுரு, திருப்பூர் - அருணாச்சலம், கன்னியாகுமரி - பசுலியான் நசரேத், நெல்லை - சிம்லா முத்துசோழன், பொள்ளாச்சி - கார்த்திகேயன், பெரம்பலூர் - சந்திரமோகன், புதுச்சேரி - தமிழ் வேந்தன்.

நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் விபரம்:தென் சென்னை - ஜெயவர்தன், வடசென்னை - ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ், ஆரணி - கஜேந்திரன், விழுப்புரம் (தனி) - பாக்யராஜ், சேலம் - விக்னேஷ், நாமக்கல் - தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக்குமார், கரூர் - தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், நாகப்பட்டினம் (தனி) - சுர்ஜித் சங்கர், மதுரை - சரவணன், தேனி - நாராயணசாமி, ராமநாதபுரம் - ஜெயபெருமாள்.

மொத்தமாகத் தமிழகத்தில் 32 இடங்களிலும், புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 33 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

சார்ந்த செய்திகள்