Skip to main content

ஜெயலலிதா, சசிகலா பாணியில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி யாகம்!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

ADMK LEADER AND TN CM WIFE SPECIAL POOJA AT KUMBAKONAM TEMPLE

 

இருபத்தி ஒராண்டுகளுக்கு முன்பு வரை அய்யாவாடி பிரத்யங்கிராதேவி கோயில் இருப்பதாகவே அப்பகுதியில் உள்ள பலருக்குமே தெரிந்திடவில்லை.

 

2000- ஆம் ஆண்டின் மே மாத அமாவாசையன்று ஜெயலலிதாவும், அவரது தோழியான சசிகலாவும், அந்த பிரத்யங்கிராதேவி கோயிலில் சிறப்பு யாகத்தை செய்துவிட்டு சென்ற பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் என்கிற அடிப்படையில் அந்த கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது.

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கிராதேவி கோயிலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவும் மீண்டும் தனது கணவர் முதல்வராக வேண்டும் என யாகம் நடத்திவிட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுக் கவனிக்கச் செய்துள்ளது.

 

ADMK LEADER AND TN CM WIFE SPECIAL POOJA AT KUMBAKONAM TEMPLE

 

தமிழகத்திலேயே மிகவும் பிரசித்திப் பெற்ற பிரத்யங்கிராதேவி கோயில் அய்யாவாடியில்தான் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை அன்றும், பவுர்ணமி அன்றும் நள்ளிரவு முதல் விசேஷப் பூஜை நடக்கும், அந்தப் பூஜையில் கலந்து கொள்ளுவது மிகவும் விஷேசம் எனப் பொதுமக்கள் நம்புகின்றனர். யாக பூஜையில் கலந்து கொண்டால், குடும்பத்தில் உள்ள கிரகக் கோளாறுகள் அகலும், எதிரிகள் விலகுவார்கள், இழந்ததை மீட்க முடியும் என்பது நம்பிக்கை.

 

யாகபூஜை குறித்து அங்குள்ள குருக்கல் ஒருவரிடம் கேட்டோம், "கெளரவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் அடைய பஞ்ச பாண்டவர்கள் இந்த கோவிலில்தான் யாகம் செய்தனர். அதன் பலனை அடைந்தனர். அந்த நம்பிக்கையில்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையான இன்னல்கள், சோதனைகளில் இருந்த காலத்தில், இங்கு வந்து சிறப்பு யாக பூஜை நடத்தி, மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

 

அந்த வகையில் தான் தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவும் யாகம் நடத்தி அதில் கலந்துகொண்டு மனமுறுகி வேண்டினார். அமாவாசை தினத்தன்று மட்டுமே நடைபெறும் இந்த யாக பூஜையின் விஷேசமே எதிரிகளை வீழ்த்தி, இழந்ததை மீட்டு, வெற்றிக் கிட்ட செய்யவுமே என்பது ஐதீகம். அதுபோலத்தான் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறார். கூட இருக்கும் ஒ.பன்னீர்செல்வம், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சசிகலா எனப் பெரும் பிரச்சனை எடப்பாடிக்குக் காத்திருக்கிறது. அதோடு இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா, சாவா தேர்தல் என்பதால், தனது கணவர் நினைத்தது நிறைவேற வேண்டும். தனது கணவர் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மீண்டும் முதல்வர் ஆகவேண்டும் என மனமுறுகி ஒரு மணி நேரம் வணங்கினார். ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு வேண்டினார்" என்கிறார் எதார்த்தமாக.

 

ADMK LEADER AND TN CM WIFE SPECIAL POOJA AT KUMBAKONAM TEMPLE

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடங்கினார். அவரின் தேர்தல் பிரச்சாரம் அவருக்கு வெற்றியாக அமைய வேண்டும் என பழனிசாமியின் மனைவி ராதா யாகபூஜையில் கலந்துகொண்டது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜை செய்தால் திருமணம் நடக்கும்; ஏமாற்றிய சாமியாருக்கு கத்தி குத்து 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

 youth arrested for stabbing a preacher

 

செஞ்சி அருகே உள்ள பெருங்கப்பூர் மாந்தோப்பில் நேற்று முன்தினம் சாமியார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்பு அவரின் முனகல் சத்தம் கேட்டு கணபதி என்பவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சாமியார் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

 

 youth arrested for stabbing a preacher

 

முதற்கட்டமாகச் சாமியாரின் தொலைப்பேசியை கைப்பற்றி அவருடன் தொடர்பு கொண்டவர்களை விசாரித்ததில் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு 35 வயதாகிறது. நீண்ட நாட்களாகத் திருமணம் நடக்கவில்லை. இதற்காகப் பரிகாரம் தேடி சாமியார் சரவணனிடம் சென்றேன். அவர் என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு பரிகார புகை நடத்தினார். ஆனால் திருமணம் கைகூடவில்லை. மறுபடியும் என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு பரிகார பூஜை நடத்தினார். ஆனால் அப்படியும் திருமணம் நடக்கவில்லை. இதுகுறித்து சாமியாரிடம் கேட்டபோது,  அவர் சரிவரப் பதில் சொல்லாமல் ஏமாற்றியிருக்கிறார்.

 

இதையறிந்த திருமால் சாமியாரிடம் தந்திரமாகப் பேசி மீண்டும் நள்ளிரவு பூஜை செய்வதற்குத் தான் பணம் ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு பெருங்காய்பூர் கிராமத்தில் உள்ள காளி கோயிலுக்கு வருமாறும் அழைத்துள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்ட சாமியார் சரவணன் அவரை நம்பி நள்ளிரவு பூஜை செய்ய பெருங்காப்பூர் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கே திருமாலுக்கும் சாமியார் சரவணனுக்கும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு லட்ச ரூபாய் பணம் செலவு செய்தும் எனக்குத் திருமணம் நடக்கவில்லையே உனது மந்திரம் ஒன்றும் வேலை செய்யவில்லை என்று கோபத்துடன் திருமால் கேட்டுள்ளார். இதையடுத்து இருவருக்குத் தகராறு முற்றவே திருமால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாமியாரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சாமியாரின் குடல் வெளியே சரிந்துள்ளது.

 

இதைக்கண்டு திருமால் பயந்து போக, உடனே சாமியார் திருமாலிடம் கெஞ்சி என்னை எப்படியாவது காப்பாற்று என்று அழுதுள்ளார். அதனால் இறக்கப்பட்ட திருமால் தனது இருசக்கர வாகனத்தில் சாமியாரை உட்கார வைத்து மருத்துவமனை நோக்கி அழைத்து வரும்போது இருசக்கர வாகனத்திலிருந்து சாமியார் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த சாமியார் இறந்து போனதாகக் கருதிய திருமால் சாமியார் சரவணனை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலை கணபதி என்பவர் தன் தோட்டத்திற்குச் செல்லும் போது தற்செயலாகச் சாமியாரைப் பார்த்ததையடுத்து காவல்துறைக்கும் ஊர் மக்களுக்கும் தகவல் கூறி சாமியாரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். முதலில் இதுகுறித்து சாமியாரிடம் கேட்டபோது, மூடி மறைத்துள்ளார். பின்பு  சாமியாரின் கைப்பேசியில் பேசியவர்களின் அடையாளத்தைக் கண்டறிந்து அதன் மூலம் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமாலை காவல்துறை கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Anti-corruption summons to MR Vijayabaskar

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று சென்னை, கரூர் உட்பட 20 இடங்களில் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 25.56 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணம், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.