Published on 11/07/2023 | Edited on 11/07/2023
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அதிமுக பொதுச்செயலாளராகத் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகக் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து அதற்கான விபரங்கள் அடங்கிய தகவல்கள் இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார்.