Skip to main content

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23இல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

Become in Government Arts and Science Colleges. Admission of students starts on the 23rd!

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வைத் தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ஆம் தேதிமுதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

 

செப். 3ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் தாக்கத்தைப் பொருத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னரே சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும் எனவும், சேர்க்கையின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்