Skip to main content

ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

Published on 16/05/2021 | Edited on 16/05/2021

 

aavin milk price reduced rs 3 for across tamilnadu

 

தமிழகத்தில் ஒரு லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை இன்று (16/05/2021) காலை முதல் நடைமுறைக்கு வந்தது. 

 

அதன்படி, பொதுமக்கள் ஆவின் பார்லர்கள், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூபாய் 3 குறைத்து ஆவின் பாலைப் பெற்றுக் கொள்ளலாம். சமன்படுத்தப்பட்ட பால் விலை ஒரு லிட்டர் ரூபாய் 43- க்கு பதில் ரூபாய் 40- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் அரை லிட்டர் ரூபாய் 20- க்கு பதில் ரூபாய் 18.50- க்கு விற்கப்படுகிறது. நிலைப்படுத்தப்பட்ட பால் ரூபாய் 23.50- க்கு பதில் ரூபாய் 22- க்கு விற்கப்படுகிறது. நிலை கொழுப்பு பால் ரூபாய் 25.50- க்கு பதில் ரூபாய் 24- க்கு விற்கப்படுகிறது. 

 

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் முதல் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 3-யைக் குறைக்கும் கோப்பும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்