Skip to main content

வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

aavadi house incident police investigation crpf training

 

சென்னை ஆவடியில் உள்ளது சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம். இந்த மையத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் முழுக்க முழுக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. குறிப்பாக, வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் இந்த மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில், சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்துக்கு அருகே வசிப்பவர் ராஜேஷ். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது பணியை முடித்துக் கொண்டு, நேற்று (28/04/2022) இரவு வீட்டிற்கு வந்து உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று (28/04/2022) இரவு 11.30 மணியளவில் வீட்டின் மேல் சீட்டைத் துளைத்து துப்பாக்கிக் குண்டு, அவர் மீது விழுந்துள்ளது. யாரோ கல் எறிகிறார்கள் என்று எண்ணிய ராஜேஷ் தொடர்ந்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். 

 

இன்று (29/04/2022) காலை எழுந்து பார்த்த ராஜேஷுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அருகில் குண்டு கிடப்பதைப் பார்த்த ராஜேஷ், எப்படி இங்கு வந்தது என மேலே பார்த்துள்ளார். அப்போது வீட்டின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள சீட்டைத் துளையிட்டு, குண்டு உள்ளே வந்துள்ளது என்பதை அறிந்தார். பின்னர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

 

அதைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், ராஜேஷின் வீட்டிற்குள் கிடந்த துப்பாக்கிக் குண்டை கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் போது வந்த தோட்டாவா? வேறு யாரேனும் சுட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பயிற்சி மையத்திற்கும் குண்டு பாய்ந்த வீட்டிற்கும் இடையிலான தூரம் 200 மீட்டர் மட்டுமே என்று கூறப்படுகிறது. குண்டு பாய்ந்த சம்பவத்தின் போது, நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை. 

 

சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பயிற்சியின் போது, வெளியேறிய துப்பாக்கிக் கொண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.