Skip to main content

சேலம், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்! 

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

salem including 8 medical colleges deans transferred

 

சேலம், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலர்/கூடுதல் இயக்குநராக பணியாற்றிவரும் சாந்திமலர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக உள்ள வசந்தாமணி, இதுவரை சாந்திமலர் வகித்து வந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். 

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிவந்த வள்ளி சத்தியமூர்த்தி, சேலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

கன்னியாகுமாரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி, கன்னியாகுமரி அரசு மருத்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

இதற்கான உத்தரவை தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை (மே 17) பிறப்பித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்