Skip to main content

வன ஆக்கிரமிப்பை மறைக்க 60 ஆயிரம் லஞ்சம்;வனச்சரகர் கைது!!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

வேலூர் திருவண்ணாமலை எல்லையான ஜவ்வாதுமலை தொடரில் வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா. இதன் வனச்சரகராக ராஜா என்பவர் உள்ளார்.

 

bribe

 

அமிர்தி அடுத்துள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருக்குச் சொந்தமான நிலம் அமிர்தி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ளது. இவர் வனப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக கூறி சிதம்பரத்தின் தந்தை ராமன் என்பவரை கடந்த 8-ம் தேதி அமிர்தி வனச்சரகர் ராஜா விசாரணைக்காக அழைத்துச் சென்றார். வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியதாகவும். மேலும் வழக்கு பதியாமல் இருக்கவும், ராமனை விடுவிக்க1 லட்சத்தி 50 ஆயிரம் பணம் கேட்டு முடிவில் 60 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த புதன்கிழமை இரவு விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

 

bribe

 

இதையடுத்து சிதம்பரம் என்பவர் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் தெரிவித்தார். சிதம்பரம் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பொறுப்பு சரவணகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், விஜயலட்சுமி உள்ளிட்டோர் அமிர்தி சரக வனத்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்து விசாரணை செய்தனர். 

 

அவர் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டதால் அமிர்தி வனச்சரகர் ராஜாவை 11.10.18 ந்தேதி கைது செய்து தற்போது அலுவலகத்தில் வைத்து விசாரணை  நடத்திவருகின்றனர் வருகின்றனர். தொடர்ந்து அவரது வீட்டில் ரெய்டு நடத்தவும் முடிவு செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்