Skip to main content

அம்மன் சிலை கழுத்திலிருந்த 6 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

 6-pound jewelery stolen from Angalamma temple in Erode; Police investigation

 

ஈரோடு கோட்டை என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக நாகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் நாகராஜ் நேற்று வழக்கம்போல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்து வந்தார்.

 

பின்னர், பூஜையை முடித்து விட்டு அம்மன் கழுத்தினை பார்த்தபோது அம்மன் கழுத்திலிருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்தபோது, கோவில் பூசாரி சாமி கருவறையில் அலங்கார பணியிலிருந்தபோது சாமி கும்பிடுவது போல் வந்த 35 வயது மர்ம நபர் கருவறைக்குள் நைசாக உள்ளே சென்று அம்மன் கழுத்திலிருந்த 6 பவுன் செயினை திருடிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

 

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து செயின் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்