Skip to main content

40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது!

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

A 40-year-old woman was assaulted... 5 people, including a boy, were arrested!

 

அருப்புக்கோட்டை அருகே காரில் சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அருப்புக்கோட்டையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விருதுநகருக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுவிட்டு காரில் நண்பருடன் மீண்டும் அருப்புக்கோட்டை கிளம்பியுள்ளார். அப்பொழுது அவர்கள் காரை பின் தொடர்ந்து வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தி பெண்ணுடைய நண்பரை தாக்கியதோடு பெண்ணை கடத்தி கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண் அணிந்திருந்த 5 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில்  சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருவதால் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 பேரின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.