Skip to main content

கோபியில் 3,260 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

3,260 tonnes of plastic waste sent to cement plant in Gobi

 

கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொண்டு இயந்திரங்கள் இயக்கப்படுகிறது.

 

மக்காத மறுசுழற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர். மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்றவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியிலிருந்து 3,260 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்