Skip to main content

பிளஸ் 2 பொதுத்தேர்வு: அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

 

+2 EXAMS STUDENTS TN GOVT

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான விசயத்தில் தமிழக அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்!

 

அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும், மதிப்பெண் அதிகம் வேண்டும் என விருப்பப்படும் மாணவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு இல்லாவிடில் கரோனா தொற்று குறைந்தப் பிறகு முக்கியமான நான்கு பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மாணவர்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தேர்வு எழுதும் மையங்களை அமைத்து தேர்வுகள் நடத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவதற்கு பெரும்பாலான பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இவை அனைத்தும் அரசின் முன் இருக்கும் வாய்ப்புகளாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும் எனக் கருதப்படுவதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த அரசின் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்