Skip to main content

விநாயகர் சிலை கரைக்க சென்ற இடத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு- மேட்டூரில் சோகம்

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

2 boys lost their lives where Ganesha statue went to be melted - Tragedy in Mettur

 

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

 

nn

 

இந்நிலையில் சேலம் மாவட்டம் அருகே விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது நீரில் மூழ்கிய சந்தோஷ்(14),  நந்தகுமார்(14) ஆகிய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உடல்களை மீட்ட அப்பகுதி மக்கள் கரையில் உடல்களை வைத்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Order to open water in Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 4,715 ஏக்கரும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் முதல்வரிடம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேட்டூரில் பாசனத்திற்கு நீர் திறப்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.