Skip to main content

இயல்பை விட 16% அதிகம் பெய்த மழை 

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

16% more rain than normal

 

அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். 

 

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கேரளத்தில் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு கேரளா தெற்கு கர்நாடக கடற்கரை பகுதிகள் வழியாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்குச் செல்லும். இதனால் அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வரும் தினங்களில் வடமேற்கு திசையில் இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும்.

 

அந்தமான் கிழக்கு கடல் பகுதிகளில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து அந்தமான் தெற்கு கடல் பகுதிகளில் நிலவும். அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

 

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை பதிவான மழை என்பது தமிழகத்தில் மொத்தம் 401 மிமீ. இது இயல்பான மழை. சென்னையைப் பொறுத்தவரை பதிவான மழை 856மிமீ இயல்பான அளவு என்பது 736 மிமீ. இது இயல்பை விட 16% அதிகம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்