Skip to main content

12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக்!

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

zx

 

தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

கடந்த சில நாட்களாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளை காலை கணித தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த வினாத்தாள் திருவண்ணாமலையில் வாட்சாப் வாயிலாக சிலர் கசியவிட்டுள்ளனர். மேலும் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளும் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்  துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 10th, 11th, 12th General Examination Time Table Publication

 

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''10, 11, 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் ஏற்கனவே படித்து நன்றாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். தமிழ்நாட்டு முதல்வர் சொல்வது போல இந்த வயது என்பது 'படிப்பு... படிப்பு... படிப்பு...' என அதில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய வயது. வேற எந்த ஒரு விஷயத்திற்கும் நமது நாட்டம் சென்றுவிடாமல் நீங்கள் கவனமாக நல்ல முறையில் படித்து நல்ல விதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாக வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்றார்.

 

தொடர்ந்து வெளியான பொதுத்தேர்வு கால அட்டவணையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 26/3/2024 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 19/2/2024 தொடங்குகிறது.11 ஆம் வகுப்பு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.23 ஆம்  தேதி தொடங்கி பிப்.29 தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

தமிழ் -    26/03/2024

 

ஆங்கிலம் -    28/03/2024

 

கணிதம் -    01/04/2024

 

அறிவியல் -   04/04/2023

 

சமூக அறிவியல் -   08/04/2024

--------------------------------------------------------------------------

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

மொழிப்பாடம்-     04/03/2024
 
ஆங்கிலம்-       07/03/2024

இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்- 12/03/2024

கணினி அறிவியல்/ புள்ளியியல் - 14/03/2024
 
உயிரியல் /வணிக கணிதம் / வரலாறு - 18/03/2024

வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்- 21/03/2024

--------------------------------------------------------------------------

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  அட்டவணை

 

மொழிப்பாடம் -     01/03/2024

 

ஆங்கிலம் -       05/03/2024

 

கணினி அறிவியல்/ உயிரி அறிவியல்/ புள்ளியியல்-    08/03/2024

 

வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்-  11/03/2024

 

இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்-  15/03/2024

 

கணிதம்/ விலங்கியல்/நுண் உயிரியல்-  19/03/2024

 

 

Next Story

தேர்வில் உதவிய அறை கண்காணிப்பாளர்; 34 மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைப்பு

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

NN

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து நேற்று  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.

 

தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை திருப்பூர் மாவட்டமும், மூன்றாம் இடத்தை பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் உதகையில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு அறை கண்காணிப்பாளர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான விசாரணையில் அறை கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு உதவியது உறுதி செய்யப்பட்டது. இதனால் 34 மாணவர்களின் கணிதப் பாடத்திற்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் வெளியாகி உள்ளது.