Skip to main content

திருவண்ணாமலையில் 10500 வாகனங்கள் பறிமுதல்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

கரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி காரணமின்றி வாகனம் ஓட்டுபவர் மீது வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.04.2020 தேதி மட்டும் தற்போதைய நிலவரப்படி  718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 723 பேர் கைது செய்யப்பட்டு, 711 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோ என மொத்தம்  714 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

10500 vehicles confiscated in Thiruvannamalai

 

இதுவரை கடந்த 17 நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமாக 10,153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,929 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 10,287 இருசக்கர வாகனங்கள், 35 ஆட்டோக்கள், 116 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம்  10,438 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு பின் நீதிமன்றத்தில் வரும். அப்போது அபராதம் கட்டிவிட்டு வாகனத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்