Skip to main content

10.5% உள் இடஒதுக்கீடு ரத்து! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்! 

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

10.5% internal reservation canceled! Demonstrators!

 

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மேல் முறையீடு செய்யவும் ஆலோசனை நடைபெற்றுவந்துகொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில், சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணையை  ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்.  வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  மாநில செயற்குழு உறுப்பினர் பி.கே அருள், முன்னாள் மாவட்டச் செயலாளர் முருகன், தொழிற்சங்க நிர்வாகி வீரமணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டு அரசாணை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்