Skip to main content

விஸ்வாசம் படத்தை போலி டிக்கெட்டில் 100 பேர் பார்த்தனர்..!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

aa

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் ‌பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்பட சில ஊர்களில்  நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் வத்தலக்குண்டில் உள்ள அஜித் ரசிகர்கள் தியேட்டர் முன்பு 120 அடியில் அஜித்திற்கு பிரமாண்டமான கட்டவுட் வைத்துள்ளனர் அதற்கு பால் அபிஷேகம் செய்தனர். ஆழ்வார் அஜித் ரசிகர் மன்றத்தின் தலைவர் மகாமுனி தலைமையில் நகர் பகுதியில் மட்டுமே வைக்கப்படும் கட்டவுட்களை கிராமப்புறத்தில் உள்ள திரையரங்குகளில் வைத்து பிரமிக்கவைத்துள்ளனர். இன்று அதிகாலை முதல் காளியம்மன் கோவில் முன்பு திரண்ட ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அஜித் படம் போட்ட பேருந்தை வழிமறித்து அதிலிருந்து அஜித் படத்துக்கு பாலாபிஷேகம் செய்தனர் பின்பு ஊர்வலமாக சென்று தியேட்டர் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

ட்
போலி

 

 

மேலும் இன்று காலை 7.30 மணி காட்சி தொடங்கி படம் பார்க்க இரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளே சென்றபோது நூறு பேருக்கு இருக்கை இல்லாமல் இருந்திருக்கிறது.

 

ff
உண்மை 

 

அந்த திரையரங்கம் மொத்தம் 400 பேர் உட்காரக்கூடிய வசதிகொண்டது. அந்த 400 இருக்கையும் முழுமையாகி இவர்களுக்கு உட்கார இடமில்லாததால், காலை 7.30 மணி காட்சிக்கு டிக்கெட் எடுத்த அந்த நூறு இரசிகர்கள் குழம்பிப்போயிருக்க திரையரங்க நிர்வாகத்தினர் சோதனை செய்தனர். அப்போது போலியாக நூறு பேர் டிக்கெட் பிரிண்ட் உள்ளே வந்திருப்பது தெரியவந்தது. அதன்பின் உண்மையாக டிக்கெட் எடுத்தவர்களுக்கு அடுத்த காட்சியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். இதனால் அந்த திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்